முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் நூல்களை வெளியிடுவதற்காக 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாளன்று திருமதி வசந்தா மோகனரங்கன் அவர்களால் வசந்தா பதிப்பகம் தொடங்கப்பட்டது.
கவிதை இலக்கிய வளர்ச்சிக்காக ஆலந்தூரில் 1968-ஆம் ஆண்டு ‘கவிதை வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை அமைத்து அரும்பணி ஆற்றி வந்த கவிஞரின் நூல்களை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகள் வசந்தா பதிப்பகம் வெளியிட்டது. கவிதை, சிறுவர்கதை, நாடகம், கட்டுரை, நாவல் ஆய்வு எனப் பல துறைகளிலும் கவிஞர் படைத்த நூல்களை மீண்டும் மீண்டும் பல மறுபதிப்புகளை வெளியீட்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றது.
சிறந்த நூலுக்கான பரிசை இருமுறை தமிழக அரசின் சார்பில் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் கவிஞருக்கும் பதிப்பகத்திற்கும் வழங்கினார். AVM அறக்கட்டளை வழங்கும் தங்கப்பதக்கம் சிறுவர் இலக்கியத்திற்காக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் கவிஞருக்கு வழங்கிப் பாராட்டினார்.
முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூராரின் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை மட்டுமே வெளியிட்டு வந்த வசந்தா பதிப்பகத்தின் பதிப்புப் பயணத்தில் முனைவர் மோ.பாட்டழகன் அவர்களின் வரவு மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பதிப்பாளர் திருமதி வசந்தா மோகனரங்கன் அவர்களின் மகன் திரு.மோ.பாட்டழகன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு இலயோலா கல்லூரி தமிழ்த்துறையில் இளங்கலை தமிழிலக்கியம் பயிலும் மாணவராகச் சேர்ந்தார். படிப்புடன் பதிப்புப் பணியையும் மேற்கொண்டார். இதனால் பல புதிய எழுத்தாளர்களின் நூல்களை வசந்தா பதிப்பகம் வெளியிடத் தொடங்கியது.
தனது தந்தையான முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் மோ. பாட்டழகன் அவர்களின் செயல் திறனால் பல அரிய தமிழ் நூல்களை வசந்தா பதிப்பகம் வெளியிட்டது.
1800 தலைப்புகளில் முந்நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட்டு தமிழ் பதிப்புலகில் முதன்மை நிறுவனமாக முத்திரைப் பதித்தது.
2013-ஆம் ஆண்டு முனைவர் மோ.பாட்டழகன் அவர்கள் தாமே ஆசிரியராக இருந்து வெற்றிமுனை எனும் இலக்கிய மாத இதழை ISSN 2394-2428 எண்ணுடன் தொடங்கினார். இவ்விதழுக்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் ச.மோகன் சிறப்பாசிராகவும் நீதிபதி மூ.புகழேந்தி முதன்மை ஆசிரியராகவும் பொறுப்பேற்றனர்.
2015 ஆம் ஆண்டு முனைவர் மோ.பாட்டழகன் அவர்கள் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் என்ற ஆய்வு மையத்தைத் தொடங்கி பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தினார். இது வரை 30 பன்னாட்டுக் கருத்தரங்குகனை நடத்தி 7182 ஆய்வாளர்களின் கட்டுரைகள் நூல் வடிவமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. முனைவர் மோ.பாட்டழகன் அவர்கள் 2018-ஆம் ஆண்டு சென்னை வேளச்சேரி பதிவு அலுவலகத்தில் தமிழக அரசின் அறக்கட்டளை விதியின் கீழ் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் பவுன்டேசன் என்ற பெயரில் அற நிறுவனத்தை நிறுவினார். பதிவு எண் 234/2018
கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்.
கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்.
கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் சட்டவியல் ஆய்வு நிறுவனம்
ஆகிய இரு ஆய்வு மையங்கள் இவ் அற நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.
இவ் அற நிறுவனத்தின் தலைவராக நீதிபதி ச.புகழேந்தி பொறுப்பேற்றுள்ளார்.
முனைவர் மோ.பாட்டழகன் டாக்டர் மோ.கவிமணி. டாக்டர் மோ.கலைவாணன். இளங்கவி ஆதம் அகிலன் திருமதி.சங்கமித்திரை பாட்டழகன் ஆகியோர் இயக்குநர்களாவர்.
முத்தமிழ் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி மையம். - டாக்டர் மோ.கலைவாணன். ஹீலர் உதயகுமார்.பா.
புதிய எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிட வசந்தா பதிப்பகத்தை அணுகலாம்